பயணிகள் பேரூந்திலிருந்து 123 தோட்டாக்கள் மீட்பு.!!!
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நேற்று பிற்பகல் பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை பேருந்து நிலையத்திற்கு அருகில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 123 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணப்பையில் சிறிய இரும்பு பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தோட்டக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றில் 113 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், T-56 தோட்டாக்கள் 09 மற்றும் ஒரு LMG தோட்டா ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கு பண்டாரவளை பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.