உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடி – மின்னலுடன் மழை.!!!

நாளை முதல் (15.03.2025) எதிர்வரும் 22.03.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வடக்கு மாகாணத்துடன் ஒப்பிடும்போது கிழக்கு மாகாணத்திற்கு சற்று அதிக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்த மழை இடி மின்னலுடன் இணைந்த மழையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எதிர்வரும் 15,16 மற்றும் 17ம் திகதிகளில் ( முக்கியமாக 16 மற்றும் 17ம் திதிகள்) இடி மின்னல் நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நிகழ்வதற்கான வாய்ப்புள்ளது.

சிறு போக நெற் செய்கையின் ஆரம்ப கால நிலப் பண்படுத்தல் நடவடிக்கைகளுக்காக வயல்வெளிகளில் நிற்பவர்கள் இடி மின்னல் நிகழ்வுகள் தொடர்பில் மிக அவதானமாக இருப்பது அவசியம். குறிப்பாக மழைக்காக வயல்வெளிகளில் உள்ள மரங்களின் கீழ் பாதுகாப்பு தேடுவது இடி மின்னல் நிகழ்வின் ஆபத்தை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதலாவது இடைப்பருவ காலங்களில்( மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில்) இடி மின்னல் நிகழ்வுகளின் எண்ணிக்கையும் அதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

– நாகமுத்து பிரதீபராஜா

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722263

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time