காத்தான்குடி படகுச் சவாரிக்கு குவியும் சுற்றுலாப் பயணிகள் – அடிப்படை வசதிகள் ஏற்படுத்துமாறு கோரிக்கை.!!!
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் இடமாக காத்தான்குடி பிரதேசம் மாறிவரும் நிலையில், அங்கு அமைந்துள்ள நீர்வழிப் படகுச் சவாரி தளத்திற்கும் தினமும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
காத்தான்குடி பிரதேசம் தற்போது சுற்றுலாத் தளமாக வளர்ச்சியடைந்து வருவதுடன், குறிப்பாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகளவான மக்கள் இங்கு வருகை தருகின்றனர்.
இவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் காத்தான்குடி நீர்வழிப் படகுச் சவாரியிலும் ஆர்வத்துடன் பங்கேற்று, இயற்கை அழகை ரசித்து வருகின்றனர்.
எனினும், குறித்த படகுச் சவாரி தளத்தில் மலசல கூடம் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், இத்தளத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதியை கருத்திற்கொண்டு மலசல கூடம், குடிநீர் மற்றும் ஏனைய அத்தியாவசிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காத்தான்குடியின் சுற்றுலா வளர்ச்சிக்கு நீர்வழிப் படகுச் சவாரி முக்கிய பங்களிப்பை வழங்கும் நிலையில், அதனை மேலும் மேம்படுத்துவதன் மூலம் பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்த முடியும் எனவும் சுற்றுலாப் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.



