உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

வீட்டின் மீது லொறி கவிழ்ந்து கோர விபத்து; தந்தை–மகன் உள்ளிட்ட நால்வர் படுகாயம்.!!!

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் மடித்தலை பகுதியில் வீடொன்றின் மீது லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் குறித்த வீட்டில் வசித்து வந்த தந்தை மற்றும் மகன், லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய நால்வரும் படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறியின் பிரேக் செயலிழந்தமையே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

லொறி கட்டுப்பாட்டை இழப்பதற்கு முன்னர் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றிலும் மோதியுள்ளது. பின்னர் சுமார் 75 அடி பள்ளத்தில் அமைந்திருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீடொன்றின் மீது லொறி கவிழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215231

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time