உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது – மேலதிக விசாரணை தீவிரம்.!!!

(பாறுக் ஷிஹான்)

வீடொன்றில் ஐஸ் போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பொதி செய்த இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது 3 கிராம் 154 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 18 மற்றும் 34 வயதுடைய இரு நபர்கள் வீடொன்றில் ஐஸ் போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பொதி செய்த வேளை சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சட்ட நடவடிக்கைகாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன் சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் பொலிஸ் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.

இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் ஆலோசனைக்கு அமைய சம்மாந்துறை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.எஸ்.எம். பெரேரா வழிகாட்டுதலில் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் பல்வேறு முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரியுமான என். ரிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700880

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time