உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261123-WA0059
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கை: போராட்டத்தால் தீர்வா.??? பேச்சுவார்த்தையால் தீர்வா.???
IMG-20261115-WA0011
2027 வரவு–செலவுத் திட்டம்: அபிவிருத்திக்கான புதிய பாதையா? மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா?

Share :

மட்டக்களப்பு கறுவப்பங்கேணியில் மின்சாரம் தாக்கி இருவர் பரிதாப உயிரிழப்பு.!!!

மட்டக்களப்பு – கறுவப்பங்கேணி பகுதியில் வீடொன்றின் மேல் மாடிக் கூரையில் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில், வீட்டின் உரிமையாளரும் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டின் கூரைப் பகுதியில் மண்ணை அகற்றுவதற்காக மண்வெட்டியைப் பயன்படுத்தியபோது, அது வீட்டின் மேற்பகுதி ஊடாகச் செல்லும் உயர் மின்னழுத்த மின்கம்பியில் பட்டுள்ளது.

இதன்போது ஒருவர் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்ட நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றையவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் கறுவப்பங்கேணி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1373882

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time