உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

இரண்டு வாரங்களில் 2,178 டெங்கு நோயாளர்கள் பதிவு; ஏழு பேர் உயிரிழப்பு.!!!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 19,900 ஐக் கடந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 2,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகபட்சமாக 640 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்தில் 386 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் ஏழு பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, டெங்கு நுளம்புகள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 720194

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time