உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் சடலங்களாக மீட்பு; நானுஓயாவில் சோகம்.!!!

நுவரெலியா – நானுஓயா: நானுஓயா கிளாஸ்கோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அன்பழகன் நிக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து வெளியேறி கொத்மலை ஆற்றுடன் சங்கமிக்கும் நானுஓயா கிளாஸ்கோ நீர்வீழ்ச்சி பகுதியில் குறித்த இருவரும் குளிக்கச் சென்றபோதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215215

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time