உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கம் ஏற்பாட்டில்: பயனாளிகளுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு.!!!

(முகம்மது அக்ரம்)

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கம் (YMMA) மாவடிப்பள்ளி கிளையின் அனுசரணையில், மாவடிப்பள்ளி YMMA இன் போசகரும் கௌரவ பிரதேச சபை உறுப்பினருமான ARM. ஹில்மி அவர்களின் ஏற்பாட்டில், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் நீர்த்தாங்கிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு, YMMA மாவடிப்பள்ளி தலைவரும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உத்தியோகத்தருமான MM. சர்ராஜ் தலைமையில், மாவடிப்பள்ளி ஜும்ஆப் பள்ளிவாசலில் இன்று (07)  நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான MIM. றியாஸ் அவர்கள் பிரதம அதிதியாகவும், YMMA பாலமுனை தலைவரும், கௌரவ பிரதேச சபை உறுப்பினரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஐ.ஏ. ஸிறாஜ் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நீர்த்தாங்கிகளை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர்.

அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்ட விசேட செயத்திட்டத்தின் கீழ், இவ்வாண்டு 300 பயனாளிகளுக்கு (AMP/2026/DPWT/300) அம்பாறை மாவட்டத்தின் 17 YMMA கிளைகள் ஊடாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700887

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time