உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்.!!!

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை நீண்ட காலமாக போதியளவு அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் காணப்படுவதால், அங்கு சிகிச்சைக்காகச் செல்லும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்வியெழுப்பிய ஹிஸ்புல்லாஹ், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்திடம் ஏதேனும் திட்டம் உள்ளதா எனக் கேட்டறிந்தார்.

அவ்வாறான அபிவிருத்தித் திட்டம் இல்லையெனில், அதற்கான காரணத்தையும் அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

வாழைச்சேனை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் முக்கிய சுகாதார நிலையமாக விளங்கும் இவ்வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளை விரைவாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214334

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time