அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.!!!
மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 31ஆம் திகதி மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திற்குச் சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் அவர் நேற்று (07) கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இன்று (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.