உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன்; 477 பேர் கைது.!!!

நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (26) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 477 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 150 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 147 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 170 பேரும், கஞ்சா செடிகளுடன் 04 பேரும், போதை மாத்திரைகளுடன் 06 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 193 கிராம் 577 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 190 கிராம் 398 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 08 கிலோ 743 கிராம் 155 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 37360 கஞ்சா செடிகளும், 108 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 720088

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time