உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

“கழிவுகளற்ற கடற்கரை” திட்டம்: காத்தான்குடியில் இராணுவம் – நகரசபை இணைந்து மாபெரும் சுத்திகரிப்பு சிரமதானம்.!!!

–எம்.ரி.எம். யூனுஸ்–

ஜனாதிபதி செயலகத்தின் “கிளீன் சிறிலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான “அழகான கடற்கரை” செயற்றிட்டத்தின் கீழ், காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் விசேட சிரமதான தூய்மைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

காத்தான்குடி நகர சபையும், இலங்கை இராணுவத்தின் 11வது பட்டாலியன் இலங்கை சின்ஹ ரெஜிமெண்ட் குருக்கள்மட இராணுவ தலைமையகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, காத்தான்குடி கடற்கரை நட்சத்திர வளைவு முன்றல் மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்கரைப் பகுதிகளில் இடம்பெற்றது.

“கழிவுகளற்ற கடற்கரை” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த சிரமதான நிகழ்வில், இராணுவத்தினரின் முழுமையான பங்களிப்புடன் பிரதேச பொது அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழகங்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

11வது பட்டாலியன் இலங்கை சின்ஹ ரெஜிமெண்ட் குருக்கள்மட இராணுவ தலைமையகத்தின் வழிநடத்தலில், காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் நகர சபையின் பங்களிப்புடன், பொலிஸார் மற்றும் கடற்படையினரும் இணைந்து காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப்படுத்தல் பணிகளை முன்னெடுத்தனர்.

மேலும், நகர சபையின் திண்மக் கழிவகற்றல் வாகனங்கள் மற்றும் கனரக இயந்திரங்களும் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத், நகர சபை செயலாளர் றினோஸா முப்லிஹ், 11வது பட்டாலியன் இலங்கை சின்ஹ ரெஜிமெண்ட் குருக்கல்மட இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சம்பத் தென்னகோன், இராணுவ கட்டளை தளபதிஏ.ஜி.ராஜித ஹர்ஷன குணவர்த்தன, நகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஜவாஹிர், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர்எம்.எம்.எம் ஜறூப், பொலிஸார், கடற்படை அதிகாரிகள், பிரதேச செயலக மற்றும் நகர சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன், பொலிஸார், முப்படையினர் மற்றும் சிவில் சமூக அமைப்பினரும் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 871482

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time