உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

இரவு நேரத்தில் ஊருக்குள் புகும் காட்டு யானை: தேத்தாத்தீவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு , களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேத்தாத்தீவு கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாகக் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால், பிரதேச மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

​நேற்றிரவு ஊருக்குள் நுழைந்த இந்தக் காட்டு யானை, அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சுமார் 1500-க்கும் மேற்பட்ட செடிகளைக் கொண்ட பாரிய மரவள்ளிக் கிழங்குத் தோட்டத்தை யானை முற்றாக அழித்து நாசமாக்கியுள்ளது. அத்துடன், 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், மூங்கில் மற்றும் பல பயன்தரு மரங்களையும் முறித்துச் சேதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

​தினசரி இரவு 9 மணியளவில் ஊருக்குள் நுழையும் இந்த யானை, விடியும் வரை அங்கேயே தங்கியிருந்து அட்டகாசம் செய்வதால், மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

​யானையை ஊருக்குள் இருந்து விரட்டுவதற்காகத் தினமும் அதிகளவிலான பட்டாசுகளைக் கொளுத்த வேண்டியுள்ளதாகவும், இதற்காக நாளாந்தம் பெருமளவு பணத்தைச் செலவிட வேண்டியிருப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, இந்த யானையை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டுவதற்குரிய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேத்தாத்தீவு கிராம மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1228406

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time