மட்டக்களப்பில் வயல்களை நாசமாக்கிய காட்டு யானை: வன ஜீவராசிகள் திணைக்கள் அதிகாரிகளினால் விரட்டியடிப்பு.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.பல உயிரிழப்புகளும் பாரியளவிலான பொருள் சேதங்களும் தினம் தினம் ஏற்பட்டு வருகின்றன
நேற்று (17) மாலை வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்சேனை கிராமத்தில் பெரும்போக நெற்செய்கை வேளாண்மை வயல்களுக்குள் நுழைந்த காட்டு யானை பல மணி நேரங்கள் வயல் வெளிகளுக்குள் நின்று பெருமளவு விளைந்த நெல்லை உணவாக உட்கொண்டு அட்டகாசம் செய்துள்ளது.
குறித்த யானையை அப்பிரதேசத்திலிருந்து விரட்டியடிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு யானை வெடிகள் கொழுத்தி குறித்த யானையை காட்டுப்பகுதிக்கு பல மணி நேர போராட்டத்தின் பின்னர் அதிகாரிகளால் விரட்டி அடிக்கப்பட்டது
சம்பவத்தினால் பல ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட நெல் வயல்கள் நாசமாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகளின் அட்டகாசங்களளிருந்து மக்களையும பொருட்களையும் பாதுகாக்குமாறு வணஜீவராசிகள் திணைக்களத்துக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.

