உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 9, 2026

Hot News

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தையை கைவிட முயற்சி; பெண் கைது.!!!

கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிவறையில், பிறந்த குழந்தையொன்றை கைவிட முயன்றதாகக் கூறப்படும் 30 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இன்று (01) பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அன்றைய தினமே பிறந்ததாகக் கருதப்படும் குழந்தையை, கழிவறையில் அமைந்துள்ள நீர்த் தொட்டிக்குள் வைத்துவிட்டு அங்கிருந்து செல்ல குறித்த பெண் முயன்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் குறித்த பெண்ணை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனிடையே, மருத்துவமனைத் தகவல்களின்படி, மீட்கப்பட்ட குழந்தை தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1217825

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time