உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

சட்ட வைத்திய பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீண்டும் புதைப்பு.!!!

நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்பட்ட சர்வேஸ்வரன் கஜேந்தினி என்ற பெண்ணின் சடலத்தின் எஞ்சிய உடற்பாகங்கள், சட்ட வைத்திய பரிசோதனைகளுக்குப் பின்னர் மீண்டும் கிரான்குளம் தர்மபுரம் மயானத்தில் இன்று (08) மாலை அடக்கம் செய்யப்பட்டன.

குறித்த பெண்ணின் சடலம் நேற்று (07) மாலை நீதிமன்ற உத்தரவின்படி கிரான்குளம் இந்து மயானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

தோண்டி எடுக்கப்பட்ட சடலத்திலிருந்து எலும்புத் தொகுதி பிரித்தெடுக்கப்பட்டு மட்டக்களப்பு சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், மேலதிக ஆய்வுகளுக்காக குறித்த எலும்புத் தொகுதி பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

எஞ்சிய சடலப் பகுதிகள் சட்ட வைத்திய நடவடிக்கைகளுக்குப் பின்னர் அதே மயானத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டன.

குறித்த எலும்புத் தொகுதி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் அடிப்படையில், பெண்ணின் மரணத்திற்கான உண்மையான காரணம் கண்டறியப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ பின்னணி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட 41 வயதுடைய சர்வேஸ்வரன் கஜேந்தினி, கடந்த ஜூலை 12ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்திருந்தார்.

காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்திக்கு அருகில் காத்தான்குடியிலிருந்து களுவாஞ்சிக்குடி நோக்கிப் பயணித்த கார் ஒன்றும், எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்த கஜேந்தினி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதன் பின்னர் ஜூலை 21ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.

எனினும், பின்னர் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து ஆகஸ்ட் 7ஆம் திகதி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆகஸ்ட் 11ஆம் திகதி வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சடலம் ஆகஸ்ட் 12ஆம் திகதி கிரான்குளம் தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மரணத்தில் சந்தேகம் – நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், குறித்த வீதி விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மாதத்தின் பின்னர் பெண் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் எழுந்ததாகவும், மரணம் விபத்தின் விளைவாக ஏற்பட்டதா என்பதை உறுதி செய்வதற்காக பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்சினியின் முன்னிலையில் பொலிஸாரால் குறித்த பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், சட்ட வைத்திய பரிசோதனை மற்றும் எலும்புத் தொகுதி ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மரணத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1216375

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time