உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

வடிகால் பணியின் போது மதில் இடிந்து விழுந்து தொழிலாளி படுகாயம்: காத்தான்குடியில் சம்பவம்.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு காத்தான்குடி நகரசபை பிரிவில் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மதில் இடிந்து விழுந்ததினால் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நேற்று மாலை குறித்த வடிகாலமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நேரம் அருகில் இருந்த மதில் இடிந்து விழுந்து குறித்த ஊழியர் படுகாயமடைந்தார்

தம்புள்ளையைச் சேர்ந்த 40 வயதுடைய குறித்த ஊழியர் படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பும் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்

நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் அமைக்கப்படாதிருந்த வடிகாலமைப்பு பணிகள் தற்போது நகர சபையின் மேற்பார்வையில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700845

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time