உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

உலக சுற்றுச்சூழல் தினம் அனுஷ்டிப்பு: பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி.!!!

-பாறுக் ஷிஹான்-

சர்வதேச சூழல் தினமான ஜூன் – 05 தினை அனுஷ்டிக்கும் முகமாக    கல்முனை  அஸ்-ஸுஹறா  வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யாவினால்  பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் முதலில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் சிரமதான நிகழ்வுகள் முதலில் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து  இன்று (05) அப்பாடசாலை அதிபர் தலைமையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள்    இடம்பெற்றதுடன் அவர் பல்வேறு சூழல் சார் கருத்துக்களை வழங்கினார்.

இதன்போது இயற்கை ஒரு மடல் எனும் தொனிப்பொருளில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் அடங்கிய விடயங்களை   மாணவர்களின் சுற்றுச்சூழல் தொடர்பான ஆற்றுகைகள் ஊடாக  இடம்பெற்றன. நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் எதிர் காலத்தில் பிளாஸ்டிக் பாவனையை இழிவாக்குவதில் தம்மால் இயன்ற  பங்களிப்பை வழங்க உறுதி பூண்டுமிருந்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்  ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் பின்னர்  இரண்டாம் கட்ட நிகழ்வாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வுடன்  மரம் நடுகை நிகழ்வும் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றதுடன் மாணவர்கள் ஆசிரியர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

இன்று உலக சுற்றுச்சூழல் தினமாகும். 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோரு ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன. உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 870731

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time