உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

கதிர்காம பாதயாத்திரை நாயை உதைத்து துன்புறுத்திய இளைஞர் கைது; சமூக வலைதளங்களில் வைரலான சம்பவம்.!!!

-பாறுக் ஷிஹான்-

கதிர்காம பாத யாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

21 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நாய் யாழில் இருந்து கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டு வரும் குழுவினரோடு பயணித்து வரும் சுப்பிரமணியன் எனும் பெயருடைய  நாய் என்பதாகும்.

மேலும் நேற்று கல்முனை பிரதேசத்தில் வைத்து  சந்தேக நபரினால்  தாக்கப்பட்டுள்ளமை மனிதாபிமானமற்ற செயலாகும் என இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சுமார்  450 கிலோ மீற்றர்  தூரம் பயணித்து வந்த குறித்த சுப்பிரமணியன் எனும் நாய் தாக்கப்பட்டமை சமூக ஊடகங்களில் வைரலானதுடன் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கண்டங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாயை தாக்கிய சந்தேக நபர்  கைது செய்யப்படுவதற்கு முன்னர் தனது சமூக ஊடக பக்கத்தில் குறித்த நாய் தன்னால் துன்புறுத்தலுக்கு உள்ளானமை குறித்து மன்னிப்பு கோரி உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல வழிகாட்டலில்  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி ஆலோசனைக்கமைய  கல்முனை பிராந்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்த நாராயண  நெறிப்படுத்தலில்  இடம்பெறுவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929024

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time