உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது.!!!

(பாறுக் ஷிஹான்)

அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் இரு அதிகாரிகள் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹியத்தகண்டிய பகுதியை சேர்ந்த நபர் கொழும்பிலுள்ள லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ரூபா 50000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்தனர்.

நேற்று (10) மாலை கைது செய்யப்பட்ட இந்த இரண்டு சந்தேக நபர்களும் பின்னர் தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை நிறைவு செய்ததன் பின்னர் இன்று (11) நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகாக ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700894

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time