கல்வி சீர்திருத்தங்களுடன் தொடங்கிய 2026 கல்வியாண்டு – கால் கோள் விழா.!!!
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாம் தர மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிக்கும் கால் கோள் விழா நிகழ்வு, கற்பிட்டி அல்ஹிரா ஆரம்ப பாடசாலையில் வியாழக்கிழமை (29) அதிபர் எம். எம். எம். நௌப் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. எம். ஜவாத் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். கௌரவ அதிதியாக வேல்ட் விஷன் நிறுவனத்தின் கற்பிட்டி இணைப்பாளரும் கலந்து கொண்டார்.
மேலும், பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்கான புதிய பாடத்திட்டம் இவ்வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





