உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; சந்தேக நபர் ஊர் மக்களால் மடக்கிப் பிடிப்பு – பொலிசார் தீவிர விசாரணை.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று வயது பெண் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது
கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் சுமார் 35 வயது மதிக்கத்தக்க திருமணம் முடித்த நபர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று வயது பெண் பிள்ளையை இரகசிய இடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அந்த மூன்று வயது குழந்தை வலியினால் துடித்துள்ளது இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த வாழைத்தோட்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது டன் சம்பவத்துடன் தொடர்பு பட்ட நபரின் வீட்டை ஊர் மக்கள் முற்றுகை இட்டதை அடுத்து தப்பி ஓட முயற்சித்துள்ள நிலையில் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் ஊர் மக்களால் பிடிக்கப்பட்டு கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பாதிக்கப்பட்ட பெண் பிள்ளையை புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700218

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time