உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 4 கிலோ 454 கிராம் தங்கம் – இலங்கை கடற்படையினரால் இருவர் கைது.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் நேற்று (01) காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நான்கு (04) கிலோ நானூற்று ஐம்பத்து நான்கு (454) கிராம் தங்கத்தை கடத்த முயன்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் ஒரு டிங்கி (01) படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடல் வழியாக கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வகையில் கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், புதன்கிழமை (01) காலை கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனம் நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஒரு சந்தேகத்திற்கிடமான (01) டிங்கி படகை சோதனை செய்தனர். அந்த டிங்கியின் மீன்பிடி வலையில் பதின்மூன்று (13) சந்தேகத்திற்கிடமான ஈய எடைகள் காணப்பட்டதாகவும், மேற்கொண்ட சோதனையின் போது, நுணுக்கமாக தயாரிக்கப்பட்டு ஈய எடைகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயற்சித்த சுமார் நான்கு (04) கிலோகிராம் நானூற்று ஐம்பத்து நான்கு (454) கிராம் தங்கம் மற்றும் ஒரு டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி வென்தேசிவத்தை மற்றும் ஆனவாசல் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், தங்கம் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700220

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time