உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 405 கிலோ பீடி இலைகள் பறிமுதல் – இருவர் கைது.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினர், வெள்ளிக்கிழமை (03) கற்பிட்டி குடாவ கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் நானூற்று ஐந்து (405) கிலோகிராம் பீடி இலைகள், ஒரு (01) டிங்கி படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி வெள்ளிக்கிழமை (03) இரவு கற்பிட்டிக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) படகு சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, ​​ சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் நானூற்று ஐந்து (405) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு இரண்டு (02) சந்தேக நபர்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மேற்படி நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி முகத்துவாரம் மற்றும் பள்ளிவாசல்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி திணைக்கள சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700213

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time