உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 50 ஆயிரம் இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பபின்றி உள்ளனர்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு நேர்முகத் தேர்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தகவல் .!!!

(ஜேகே)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் வேலைவாய்ப்பின்றி ஐம்பதாயிரம் இளைஞர் யுவதிகள் உள்ளனர். மாவட்டத்தின் சனத்தொகையில் 7 சதவீதமான இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ரோமேனியா நாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகத் தேர்வு இன்று (12) காலை மட்டக்களப்பு கிரீன் மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மேலதிக அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்

இலங்கை வேலைவாய்ப்பு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அனுசரணையுடன் அப்ரோன் குழுமத்தினால் மேற்படி ரோமேனியா நாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக இளைஞர் யுவதிகள் அனுப்பப்படவுள்ளனர்.

ரோமேனியா நாட்டிலிருந்து வருகை தந்த ரோமேனியா நாட்டு பிரதிநிதி திருமதி ரொக்சானா தலைமையில் நேர்முகப் பரீட்சைகள் இடம் பெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து சுமார் 350 இளைஞர் யுவதிகள் குறித்த நேர்முக பரீட்சையில் பங்கெடுத்திருந்தனர்.

அப்ரான் குழுமத்தின் தலைவர் டாக்டர் சிவலிங்கம் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் தேர்வு நிகழ்வில் அப்ரோன் குழுமத்தின் பிரதம ஆலோசகரும் நிறைவேற்று அதிகாரியுமான பொறியியலாளர் டன்சான் பாபு உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்

சுமார் எட்டு மாத காலத்திற்குள் ரோமேனிய நாட்டுக்கு இன்று நேர்முகப் பரீட்சையில் தோன்றியவர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

இதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு இவ்வாறு வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்காக நம்பிக்கையான நிறுவனங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது இவ்வாறு அதிகமான நிறுவனங்கள் மாவட்டத்திற்கு வருகை தந்து நம்பகத்தனமான முறையில் இளைஞர் யுவதிகளை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அனுப்புகின்ற போது எமது மாவட்டத்தில் நிலவுகின்ற வேலைவாய்ப்பு பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்தார்.

Related News

Total Websites Views

Total Views: 116053

Search

விளம்பரங்கள்