685 கிலோ உலர்ந்த கடல் அட்டைகள் பறிமுதல்: 34 வயது நபர் கைது – கடற்படை அதிரடி நடவடிக்கை.!!!
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் கற்பிட்டி முகத்துவாரம் கடற்பரப்பில் 685 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (23) வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் கடற்படை கப்பல் ‘விஜய’ மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு பரிசோதிக்கப்பட்டது. அதில் சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு செல்லப்பட்டதாகக் கருதப்படும் அறுநூற்று எண்பத்தைந்து (685) கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டன.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார். கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகு மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சட்டவிரோத கடல் வள கடத்தல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

