உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 90 ஆயிரம் சிகரெட் மற்றும் 1324 கிலோ பீடி இலைகள் – பொலிஸாரால் பறிமுதல்.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோத நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 1324 கிலோகிராம் பீடி இலைகளையும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 90,000 சிகரெட்டுகளையும் மாரவில பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மாரவில, முடுகடுவ பகுதியில் வெள்ளிக்கிழமை (10 ) அதிகாலை 3.00 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

பீடி இலைகள் 34 பொலிதீன் பைகளில் அடைக்கப்பட்டிருந்ததுடன், 450 சிகரெட் பண்டல்கள் அடங்கிய 09 பெட்டிகளில் சோதனை நடவடிக்கையின்போது அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பீடி இலைகள் மற்றும் சிகரெட்டுகள் 04 சிறிய படகுகளில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் சிகரெட்டுகள் வென்னப்புவ – வைகாலில் உள்ள கலால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700196

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time