வீதிக் கடவையில் விபத்து – பெண் மருத்துவமனையில் அனுமதி.!!!
(வாழைச்சேனை செய்தியாளர்)
வீதிக் கடவையில் வைத்து பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று (14) செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னால் அமைந்துள்ள வீதிக் கடவையில் இடம்பெற்றுள்ளது.
வீதிக் கடவை ஊடாக வீதியை குறுக்கறுக்கும்போது பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் காயமடைந்த பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
