அட்டாளைச்சேனையில் விபத்து – 22 வயது இளைஞன் ஸ்தலத்தில் பலி.!!!
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற சாலை விபத்தில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலை சுமார் 7.00 மணியளவில் முச்சக்கரவண்டியூம் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மேலதிக சட்ட மருத்துவ நடவடிக்கைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்துக்கான காரணங்கள் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் காலை நேரங்களில் வாகன ஓட்டிகள் வேகக் கட்டுப்பாட்டுடன் மற்றும் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.