உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

அட்டாளைச்சேனை பிரீமியர் லீக் 2025 தொடரில்; GTC Challengers அணி – 2வது வருடமும் சம்பியனாக தெரிவு.!!!

(கே ஹமீட்)

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களின் திறமையை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒழுங்குபடுத்தப்பட்ட அட்டாளைச்சேனை பிரீமியர் லீக் 2025 பகல் இரவு கிரிக்கெட் சுற்றுப்போட்டி, கடந்த ஜூலை 09ஆம் திகதி, அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் விமரிசையாக ஆரம்பமாகி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இவ் விளையாட்டு போட்டியிற்கு பிரதம அதிதியாக Nest International நிறுவனத்தின் உரிமையாளரர் சாப்னாஸ் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்தத் தொடரில் Thaikkanagar Hitters, GTC Challengers, Sadhanian Achievers, Sarqian Royals, Kappaladi Kings, Chenaioor Warriors மற்றும் Union Blasters ஆகிய 7 அணிகள் பங்கேற்றன. சுழற்சி முறையில் மொத்தம் 25 போட்டிகள் அணிகளுக்கிடையில் நடத்தப்பட்டன.

மிகுந்த உற்சாகத்துடன் 2025.04.13ம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில், Thaikkanagar Hitters மற்றும் GTC Challengers அணிகள் நேருக்கு நேர் மோதின. பலத்த போட்டியின் முடிவில், தொழிலதிபர் எம்.ஏ.ரிழா தலைமையிலான GTC Challengers அணி தங்களின் சிறந்த அணிச்செயல்திறனால் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

வெற்றிபெற்ற GTC Challengers அணிக்கு ரூ. 60,000 பெறுமதியான பணப் பரிசுகளும், தங்கப்பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட(Runner-Up) Thaikkanagar Hitters அணிக்கு ரூ. 40,000 பெறுமதியான பணப் பரிசுகளும் தங்கப்பதக்கங்களும் வழங்கப்பட்டன.

தொடரில் விருதுகளைப் பெற்றோர்:

1.ஆட்டநாயகன் (Player of the Series): முபாரிஸ் (Sarqian Royals)

2. வளரும் திறமை வாய்ந்த வீரர் (Emerging Player): ரிஹாப் (Sadhanian Achievers)

3. ⁠சிறந்த துடுப்பாட்ட வீரர் (Best Batsman): முபாரிஸ் (Sarqian Royals)

4. ⁠சிறந்த பந்துவீச்சாளர் (Best Bowler): றப்ஸான்

5. ⁠இறுதிப் போட்டி ஆட்டநாயகன் (Final Man of the Match): சாதிர் (GTC Challengers)

இத்தொடர், அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்களுக்கான விளையாட்டு மேடையாக மட்டுமல்லாமல், விளையாட்டு ஒழுங்கு மற்றும் திறமையை வெளிக்கொணரும் ஒளிக்கண்ணாடியாகவும் அமைந்தது. இளம் துடிப்புள்ள வீரர்களுக்கு இது ஒரு புதிய திசை தந்த நிகழ்வாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700379

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time