தெற்காசிய சிரேஷ்ட தடகள போட்டியில் பதக்கம் வென்ற விமானப்படை வீரர்கள் கௌரவிப்பு.!!!
இந்தியாவின் ராஞ்சியில் கடந்த ஒக்டோபர் 24 முதல் நடைபெற்ற 4ஆவது தெற்காசிய சிரேஷ்ட தடகள சம்பியன்ஷிப் – 2025 போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களை வென்ற விமானப்படை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நேற்று (03) காலை விமானப்படை தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவை சந்தித்தனர்.
இந்நிகழ்வின் போது, திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்ற வீர, வீராங்கனைகளுக்கு விமானப்படை தளபதியினால் பதவி உயர்வுகளும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தமது சாதனையால் இலங்கை விமானப்படைக்கும், தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்ததற்காக விமானப்படைத் தளபதி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 59 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
அவர்களில் விமானப்படையைச் சேர்ந்த 9 வீரர்கள் இதில் இடம்பிடித்திருந்தனர்.
இலங்கை விமானப்படை வீரர்கள் மொத்தம் 6 பதக்கங்களை கைப்பற்றினர் — அதில் 2 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கம் அடங்கும்.

















