அமெரிக்க பயணிகள் விமானத்தில் தீப் பிடிப்பு; விமானத்தில் இருந்த 178 பேர் மீட்கப்பட்டனர்.!!!
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் 737-800 விமானம் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தீப்பிடித்தது. சம்பவத்தின் போது, விமானத்தில் 172 பயணிகள் மற்றும் விமானிகள் உட்பட 6 பணியாளர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
கொலராடோ ஸ்பிரிங்ஸ் விமான நிலையத்திலிருந்து டல்லாஸ் ஃபோர்ட் வொர்த்துக்குச் சென்ற விமானத்தில் பிரச்சனை இருப்பதை உணர்ந்த விமானி விமானத்தை அவசரமாக டென்வர் நகருக்குத் திருப்பிவிடப்பட்டு மாலை 5:15 மணியளவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என்று ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன்(FAA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மீட்பு முயற்சியில் சிறிய காயங்கள் ஏற்பட்ட 12 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.







