உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

காத்தான்குடியில் 360 பிரஜா சக்தி உறுப்பினர்களுக்கு – நியமனம் வழங்கி வைப்பு.!!!

– எம்.ரி.எம்.யூனுஸ் –

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பிரஜா சக்தி சமூக அபிவிருத்திச் சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (24) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் காத்தான்குடி பிரஜா சக்தி தவிசாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கால் நடை மற்றும் காணி விவசாய அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திலகநாதன், காத்தான்குடி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தெளஸ் (நளீமி), கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் அப்துல்லாஹ், சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் இணைப்பாளர் வானி, உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, உதவி பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். தனூஜா, காத்தான்குடி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் நசீர்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், 18 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 360 பிரஜா சக்தி சமூக அபிவிருத்திச் சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கிராமிய மட்டத்திலான சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்டு, அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700923

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time