இலங்கை போக்குவரத்துச் சபையில் புதிய சாரதிகள், நடத்துனர்கள் நியமனம் – எதிர்கால புதிய பஸ் திட்டங்கள் அமுலில்.!!!
இலங்கை போக்குவரத்துச் சபையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 199 சாரதிகளுக்கும் மற்றும் 342 நடத்துனர்களுக்குமான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (10) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான மற்றும் தொடர்ச்சியான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என இதன்போது ஐனாதிபதி குறிப்பிட்டார்.
அதன்படி, அரசாங்கம் தற்போது போக்குவரத்துக்கான தேசியக் கொள்கையை உருவாக்கி வருகிறது. எதிர்காலத்தில் புதிய தரமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவும், பழைய பஸ்களை படிப்படியாக போக்குவரத்து கட்டமைப்பிலிருந்து ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
ஐனாதிபதி மேலும், இந்த நடவடிக்கைகள் ஒரே தடவையில் முடியாதவற்றாக இருந்தாலும், சில வருடங்கள் திட்டமிட்ட முறையில் செயல்படுத்துவதன் மூலம் மக்களுக்கு தரமான போக்குவரத்துச் சேவையை வழங்க அரசு முடியும் எனத் தெரிவித்தார்.









