காத்தான்குடி தள வைத்தியசாலையில்: ரமழான் நோன்பு திறப்பு நிகழ்வு.!!!
-எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடி தள வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் புனித ரமழான் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று (05) வியாழக்கிழமை மாலை காத்தான்குடி தள வைத்தியசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம். ஜாபிர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லடி இராணுவ படைப் பிரிவின் கெப்டன் இந்திக்க குமார, 253வது படைப்பிரிவின் பிரிகேடியர் ராஜபக்ஷ மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி நாளக அலககோன் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், மருத்துவ துறை அதிகாரிகள், காத்தான்குடி பிரதேச கல்வியலாளர்கள், மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் ரமழான் சிந்தனையை அக்ரம் அபூபக்கர் நளீமி நிகழ்த்தினார்.



















