உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் காயம்.!!!

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா கண்ணகியம்மன் ஆலய வீதியில் இன்று  (02) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர் விநியோகம் தொடர்பாக இருவருக்கு இடையே நடைபெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதன் காரணமாக வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டுத் துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்த உள்நாட்டுத் துப்பாக்கியும் வவுணதீவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700461

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time