உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

குறைந்த வருமானக் குடும்ப மாணவர்களுக்கு: கல்வி பயணத்தை எளிதாக்க சைக்கிள்கள் வழங்கல்.!!!

-நூருல் ஹுதா உமர்-

வடமத்திய மாகாணத்தில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக்கு எளிதில் செல்ல உதவும் நோக்கில் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்றது.

வடமத்திய மாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க, Qatar Charity அமைப்பினால் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. தொலைதூரப் பகுதிகளில் இருந்து பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் கல்வி பயணத்தை எளிதாக்கும் நோக்கில் இச்சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் வடமத்திய மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆனந்த ரத்நாயக்க, பொதுமக்கள் தொடர்பு அலுவலர் அசேல விஜேசிங்க, Qatar Charity அமைப்பின் இலங்கை பிரதிநிதி மற்றும் அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு, பொருளாதார வசதிகள் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு உதவுவதோடு, சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான மனிதநேய நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 702053

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time