காத்தான்குடியில் பிளிட்ஸ் சாம்பியன் கிண்ணம் – 2025; கிரிக்கெட் தொடர் தொடக்க விழா.!!!
காத்தான்குடியை மையமாகக் கொண்டு விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வமாக செயல்பட்டு வரும் பிளிட்ஸ் விளையாட்டுக் கழகம், பெருமையடன் நடாத்தவுள்ள பிளிட்ஸ் சாம்பியன் கிண்ணம் 2025 கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, உத்தியோகப்பூர்வ ஜெர்சி வெளியீடும், சாம்பியன் கோப்பை அறிமுகமும் நிகழ்வு நேற்று (21) திங்கட்கிழமை காத்தான்குடி பீச்வே மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது பிளிட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எம். இல்ஹாம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் கலந்து கொண்டார்.
நிகழ்வில் கௌரவ அதிதிகளாக ஏறாவூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், இமாசா ஹாட்வெயார் உரிமையாளர் ஏ.ஜீ.அஜ்வத் மற்றும் ஊர் பிரமுகர்கள், ஊரின் முக்கியஸ்தர்கள், விளையாட்டு வீரர்கள், ஊடகவியலாளர்கள், விளையாட்டு ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இடம்பெறவுள்ள போட்டிகள் குறித்து ஏற்பாட்டாளர்கள் பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் வெளியிட்டனர். “எங்கள் இளம் சாம்பியன்கள் சிறந்து விளங்க எங்களின் ஆதரவும் உற்சாகமும் தொடர்ந்து இருக்கும்” என தெரிவித்தனர்.
பிளிட்ஸ் சாம்பியன் கிண்ணம் – 2025 கிரிக்கெட் தொடர், காத்தான்குடி இளம் விளையாட்டு வீரர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு முக்கிய மேடையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.









