கதுருவெல – கொழும்பு சாலையில் பேரூந்து விபத்து; நால்வர் பலி, 28 பேர் காயம்.!!!
கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று, பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பின்னால் வந்த மற்றொரு தனியார் பேரூந்துடன் மோதியதில் பெரும் விபத்து இன்று (31) ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்ததுடன், 28 பேர் பலத்த காயங்களுடன் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னால் வந்த பேரூந்து அதிவேகமாக பயணித்தது காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன, மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


