உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மட்டக்களப்பில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு; திருகோணமலை நோக்கி பயணித்த கார் விபத்து.!!!

மட்டக்களப்பில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு திருகோணமலை நோக்கி பயணித்தவர்கள் சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து, திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேருநுவர பகுதியில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், காரில் பயணித்த அனைவரும் காயமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, மட்டக்களப்பில் உள்ள திருமண வீட்டிற்கு சென்று திரும்பும் போது ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700014

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time