உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 26, 2026

Hot News

IMG-20261123-WA0059
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கை: போராட்டத்தால் தீர்வா.??? பேச்சுவார்த்தையால் தீர்வா.???
IMG-20261115-WA0011
2027 வரவு–செலவுத் திட்டம்: அபிவிருத்திக்கான புதிய பாதையா? மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா?

Share :

இலங்கையில் மீண்டும் அதிகரித்த சீமெந்து விலை: 50 கிலோ மூடைக்கு 100 ரூபா உயர்வு.!!!

இலங்கையில் சீமெந்து விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் நுகர்வோருக்கும் மேலதிக செலவுச் சுமை ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, 50 கிலோ கிராம் சீமெந்து மூடையின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2,100 ரூபா முதல் 2,250 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த 50 கிலோ சீமெந்து மூடை, தற்போது 2,200 ரூபா முதல் 2,350 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்வுக்கான காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத் துறையினருக்கு, சீமெந்து விலையின் இந்த அதிகரிப்பு மேலும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1360704

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time