இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: மார்ச் 9 முதல் புதிய திட்டம் அமுல் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு.!!!
இலங்கை மின்சார சபையின் (CEB) பணிகள் மற்றும் பொறுப்புகளை மறுசீரமைக்கும் வகையில் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிவித்தலின் படி, மின் உற்பத்தி, மின் கடத்தல், மின் விநியோகம் மற்றும் மின் அமைப்பு இயக்கம் ஆகிய துறைகளை தனித்தனியாக நிர்வகிக்கும் வகையில் ஆறு புதிய நிறுவனங்களை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனுடன் தொடர்புடைய வகையில், 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை சட்டத்தின் பல உப பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.