காத்தான்குடி பாடசாலையில் மாணவர்கள் சத்தியப்பிரமாணம்.!!!
(ஜேகே)
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் சிந்தனையில் உதித்த கீளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் இன்று (10) காத்தான்குடி/அஷ்-ஷுஹதா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் எம்.சி.எம்.முனீர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது குழுக்கள் தெரிவு, சத்தியப்பிரமாணம் மற்றும் மாணவர்களுக்கான சொற்பொழிவு போன்ற ஆரம்பக்கட்ட திட்டமிடல் நடவடிக்கைகள் தொடங்கிவைக்ப்பட்டது.