அக்கரைப்பற்றில் யுவதிக்கு தொடர்ச்சியான பாலியல் தொந்தரவு: 46 வயது நபர் கைது.!!!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யுவதி ஒருவருக்கு நீண்டகாலமாகத் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு வழங்கி வந்ததாகக் கூறப்படும் 46 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆகாத குறித்த நபர், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட யுவதி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டைப் பெற்ற உடனேயே விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், நேற்று (27) சந்தேகநபரை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் அந்தப் பகுதியில் வசிக்கும் பல பெண்களுக்கும் நீண்டகாலமாக இதேபோன்ற பாலியல் தொந்தரவுகளை வழங்கி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.