இமாம் ஆயத்துல்லாஹ் அலி கொமெய்னி மறைவு: ஈரான் தூதரகத்தில் ஆதம்பாவா எம்.பி. அனுதாபம் பதிவு.!!!
(எம்.எஸ்.எம். ஸாகிர்)
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆன்மீகத் தலைவர் இமாம் ஆயத்துல்லாஹ் அலி கொமெய்னி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக, கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான ஈரானியத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப் புத்தகத்தில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் பேரவை உறுப்பினரும் கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி. இன்று (06) வெள்ளிக்கிழமை தனது அனுதாபத்தைப் பதிவுசெய்தார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கைக்கான ஈரான் நாட்டுத் தூதுவர் கலாநிதி அலி ரசா டெல்கொஷ் அவர்களை நேரில் சந்தித்த ஆதம்பாவா எம்.பி., இமாம் ஆயத்துல்லாஹ் அலி கொமெய்னி அவர்களின் மறைவிற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது ஈரான் மக்களுக்கும் அதன் தலைமையிற்கும் தமது இரங்கலையும் ஆதரவையும் அவர் வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
