உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த வைத்தியர்; இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது.!!!

அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரின் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரும் பணியாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று செவ்வாய்க்கிழமை (17) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் மற்றுமொரு நபருக்கு அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Total Websites Views

Total Views: 204404

Search

விளம்பரங்கள்