தேங்காய் எண்ணெயில் கலப்படத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை – நுகர்வோர் அதிகார சபை.!!!
உள்நாட்டு சந்தையில் பொதியிடப்படாமல் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பதில் பணிப்பாளர் நாயகம் சமந்தா கருணாசேன தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தையில் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெயில் வேறு பொருட்கள் கலக்கப்படுவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் கீழ், பொதியிடப்பட்டு விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் லேபிளில் உற்பத்தியாளரின் பெயர், எடை / அளவு, காலாவதியாகும் திகதி, தொகுதி (Batch) இலக்கம், உற்பத்தியாளர் தொடர்பான தகவல்களை தெளிவாகக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவுள்ளது:
நுகர்வோர் வாங்கும் தேங்காய் எண்ணெயின் தரம் மற்றும் அதன் உற்பத்தி தொடர்பான தகவல்களைத் தெளிவாக அறிந்து கொள்வதற்கும், கலப்படம் தொடர்பான பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கும் இந்த புதிய விதிமுறைகள் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாவனையாளர் புகார்கள் மற்றும் தகவல்களுக்கு: 1977