உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
Post Views: 355

Share :

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்; கிழக்கின் 100 சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா – மட்டக்களப்பில்.!!!

(ஜே.கே)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியீடு செய்துள்ள கிழக்கின் சிறுகதைகள் இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் பண்பாட்டு அலுவலகத்தில் திணைக்கள மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்றது

குவைத் நாட்டுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் பாலசுப்பிரமணியம் காண்டீபன் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் எஸ் பிரகாஷ் கிராமிய அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் கே இளங்குமுதன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் டி ஜே அதிசயராஜ் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் சிவராஜ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்

மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த கிழக்கு மாகாணத்தின் 100 புனைகதை எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட 100 சிறுகதைகள் குறித்த கிழக்கின் சிறுகதைகள் 100 தொகுப்பில் இடம்பெற்றுள்ளன

நூல் ஆய்வு உரைகளை பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித் துறை விரிவுரையாளர் எம் அப்துல் ரசாக் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஊராட்சி உதவி ஆணையாளர் எஸ் பார்த்திபன் ஆகியோர் நிகழ்த்தினார்

சிறுகதை எழுத்தாளர்களின் சார்பாக சிரிஷ்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ரீ.எல். ஜவ்பர்கான் விசேட உரை நிகழ்த்தினார்

அதிதிகளுக்கும் சிறுகதை எழுத்தாளர்களுக்கும் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2001 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள 100 சிறுகதை எழுத்தாளர்களின் கிழக்கின் சிறுகதைகள் 100 முதலாம் பாகத்தை வெளியிட்டிருந்தது இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது

எழுத்தாளர்கள், ஊடகவியாளர்கள், இலக்கியவாதிகள் உயர் அரச அதகாரிகள் என பெரும்பண்ணிக்கையிலானோர் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929118

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time