உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

பெண்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.!!!

(கற்பிட்டி – நிருபர் சியாஜ்)

வடமேல் மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், கற்பிட்டி பிரதேசத்தில் பெண்களுக்காக நடாத்தப்பட்ட ஒரு வருட சுயதொழில் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பெண்களின் உற்பத்திப் பொருட்கள் தொடர்பான கண்காட்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (30) கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு, கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் தையல் பயிற்சி ஆலோசகர் ஆர்.எஸ்.டப்ளியூ. நிரோஷா ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றதுடன், பிரதம அதிதியாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என். பிரியதர்ஷினி கலந்து சிறப்பித்தார்.

மேலும், கற்பிட்டி பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மர்ஜானா, பிரதான முகாமைத்துவ உத்தியோகத்தர் சியானா, வடமேல் மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர், புத்தளம் மாவட்ட கிராம அபிவிருத்தி இணைப்பாளர் பொருப்பாளர், வடமேல் மாகாண கிராம அபிவிருத்தியின் கற்பிட்டி பிரதேச செயல சங்கங்களின் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகளை கற்பிட்டி பிரதேசத்தில் நான்காவது முறையாகவும் சிறப்பாக நடாத்துவதற்கு முன்னின்று செயற்பட்டு வரும் கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் ஆப்தீன் (அலாவுதீன்) அவர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

இப்பயிற்சி திட்டத்தின் ஊடாக பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள் உருவாகி, குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்கான நல்ல வாய்ப்பு ஏற்படுவதாக கருத்து தெரிவித்த உதவி பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி, இச்செயற்பாட்டை முன்னெடுத்து வருபவர்களுக்கு தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700874

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time